Saturday, 17 January 2015

பிள்ளை யோகம் -



பிள்ளை யோகம் -- ஜோதிட விதி
.
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சிலரும், அப்பன் பேரைக் கெடுக்கவே பிறந்திருக்கிறான் பாரு என்று பலரும் பேசு வதைக் கேட்டிருக்கிறோம். அதாவது கோடீஸ்வரன் மகன் பிச்சைக்காரனாவும், பிச்சைக்காரன் மகன் கோடீஸ்வரனாகவும் மற்றும் நல்ல மனிதருக்குப் பிறக்கும் பையனோ அல்லது பெண்ணோ ஒழுக்கங்கெட்டவர்களாகவும், கொலைகார னாகவும்,கொள்ளைக் காரர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு பிறப்பது அவர்களுடைய தவறு அல்ல, சோதிட ரிதியில் கூறுவதானால், அவர்கள் கருத்தரிக்கும் நேரத்தைத்தான் குறை கூற வேண்டும். இதற்காகத்தான் முன்னோர்கள் சாந்தி முகூர்த்தம் என்ற சடங்கின் பெயரால் நல்ல நேரம், நல்ல நாள் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நற்குழந்தையைப் பெற: நற்குழந்தையை பெற மாதவிடாய் ஆன நாளிலிருந்து 5-ம் நாள் கருத்தரித்தால் பிறக்கும் குழந்தையானது கீர்த்தி, புகழ் வாய்ந்து தன் குலத்தை விருத்தி செய்து மேன்மைக்கு கொண்டு வருவான்.

7-
வது நாள் கருத்தரிக்கும் குழந்தையானது நீண்ட ஆயுளோடும், கற்ப னையே பிரதானமாகக் கருதி வாழ்பவனாகவும் இருப்பான்.

8-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் யுக்த காலத்திலே மகா செல்வந்தனாகவும், பாக்கியவானாகவும் இருப்பான்.

9-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தை யானது கற்பு நிலை தவறாது, பரிபூரண ஆயுளும், நற்காரியங்களிலே பிரியமும், தெய்வ பக்தியும் உடையவளாக இருப்பாள்.

10-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் ஜீவகாலம் முழுவதும் சுகமாகவும், கம்பீரத் தோற்றம் உடைய வனாகவும், செல்வத்தை விருத்தி செய்பவனாகவும், ஒரு அமைச்சரை போல புகழத்தக்கவனாய் விளங்குவான்.

12-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் தந்தைக்கு மேன்மை உடையவனாகவும், பெண்களின் வேட்கையிலே சபலப்படாத ஸ்திரமான புத்தி உள்ளவனாகவும் இருப்பான்.

14-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது நன்னெறி, நன்றி அறிதல், தருமம், தத்துவ ஆராய்ச்சி, ஞானம், எவரையும் அடக்கி ஆளும் தன்மை முதலியவற்றைக் கொண்டவனாக இருப்பான்.

15-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது லக்ஷ்மியை போல பேரழகு வாய்ந்தவளாகவும், குபேரனை ஒத்த செல்வந்தனுக்கு வாழ்க்கைப் படுபவளாகவும், கற்பு நிறைந்த வளாகவும், நல்ல வாழ்க்கை உள்ள வளாகவும் இருப்பாள்.

16-
வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது இலக்கியம், கல்வி, கேள்வி, வாய்மை, சாந்தம், யோகம், சகல வேத சாஸ்திர ஆகம பாண்டித்தியம் பெற்றவனாக அநேகரை காப்பாற்றும் மனம் உள்ளவனாக இருப்பான் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.

கூடாத நாள், நட்சத்திர, திதிகள்: 11, 13-வது நாட்களில் கருத்தரிக்கும் குழந்தையானது ஊனமாகவும், மான நடத்தையுள்ளவளாயும், துஷ்டையாயும், அவதூறுக்கு பேர்போனவளாயும் தான் மணந்த புருஷனை விட்டு அயலானை கூடி வாழ்பவளாயும் இருப்பாள்.

மாத பிறப்பு, வருஷப்பிறப்பு, விரத தினம் போன்ற நாட்களில் கணவன் - மனைவி சங்கமிக்க கூடாது.

நட்சத்திரங்களில் ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்திரம், சதயம் ஆகியவை சங்கமிக்க ஒவ்வாதவைகள்.
திதிகளில் பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, அஷடமி, ஏகாதசி, சதுர்த்தசி ஆகிய திதிகள் ஏற்றதல்ல.

தாங்கள் விரும்பும் குழந்தை பெற: மாதவிடாய் ஆன நாட்களிலிருந்து 6-வது, 8-வது, 10-வது, 12-வது, 14-வது, 16-வது, 7-வது, 9-வது, 15-வது நாட்களில் கருத்தரித்தால் பெண்குழந்தையும் பிறக்கும்.

மேலே குறிப்பிட்ட சோதிட விதிகளை கடைப்பிடித்து தங்கள் பேர் சொல்லும் பிள்ளையை பெற்று நலமுடன் வாழுங்கள்.
.

No comments:

Post a Comment