vidhai2virutcham
புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து
கொண்டிருந்தான் மன்னன்
துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும்
என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து
பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து
வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார்.
அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை
பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக
மாறு மென்றும் வரமருளி மறைந்தார்.
குழந்தையை ஆண் என்றே அறிவித்தார்க ள். ஆண் உடை உடுத்தி சிகண்டி எனப் பெயர்
சூட்டி, ஆணாகவே வள ர்த்தார்கள். தவமிருந்து பெற்ற குழந்தையாதலால், தாங்க ளே மிகுந்த கவனிப்போடு வளர்க்க
விரும்புவதாகச் சொல் லி, பணிப்பெண்களைத் தவிர்த்தார்கள். குழந்தையை நீரா ட்டுதல் போன்ற விஷயங்களைத்
தனிமையில் நிகழ்த்தி, அதுபெண் குழந்தை என்று
யாருக்கும் தெரியாமல் பார்த் துக் கொண்டார்கள். சிகண்டி ஆண்
அல்ல என்ற ரகசியம் சிக ண்டிக்கும் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும். உலகம்
சிக ண்டியை ஆண் என்றே அறிந்தது.
சிகண்டி ஆணுக்குரிய அத்தனை போர்க் கஸ்லகளையும் கற்று மாபெரும் வீரனாக
வளர்ந்தாள். வாலிப
வயதில் அந்த அழகி பெரும் அழகனாகத் தோற்றமளித்தாள். சிகண்டியின் அழகு பல இடங்களில் வியந்து
பேசப்பட்டது. சிவகடாட்சத் தால் பிறந்த குழந்தை பேரழகோடு திகழ்வதில் என்ன
விய ப்பு? சிவனின் தலையில் இருந்த இளம்பிறை வளர்ந்து முழு மதியாகி
சிகண்டியின் முகமாய் மாறியதுபோல் தோன்றிய து. சிகண்டி வீதியுலா
வந்தபோது, வெண்ணிலவைப் பழிக்
கும் சிகண்டியின் முகத்
தைப்பார்ப்பதற்காக மக் கள் பெருங் கூட்டமாகக் கூடினார்கள். மன்மத னையும் பழிக்கும்
சிக ண்டியின் அழகு பல இடங்களிலும் பேசப்ப டலாயிற்று.

இதனால் ஒரு விபரீதம் உருவாயிற்று. சிகண்டி யின் பேரெழிலைப் பற்றிக் கேள்விப்பட்டு, தாசார்ணக மன் னன்
இரண்யவர்மனின் புதல்வி, சிகண்டியைத்தான் மணப் பேன் என்று ஒற்றைக்
காலில் நின்றாள். கடவுளே! இப்போது என்னதான் செய்வது? துருபதன் மனம் அனலில்
பட்ட புழு வாய்த் துடித்தது. இரண்யவர்மனைப் பகைத்துக் கொள்ள இயலாது, அவன் பெரும் படைபலம்
நிரம்பியவன். ரகசிய த்தை வெளியிட வும் இயலாது. அது பெருத்த அவமானம். துருபதன் சிகண்டி யை
அழைத்தான். ‘‘வேறு வழியில்லை. நீ அவளை மணந் துகொள். ஆறு மாத காலம் சிவபெருமான் குறித்து விரதமி
ருப்பதாகச் சொல்லி, அவள் உன்னை நெருங்காமல் பார்த் துக் கொள்.
இப்போது மணம் நடந்தாலும் உன் சிவ விரதம் முடிந்தபிற கே அவளை நாம் நம்
இல்லத்திற்கு மருமகளாக
அழைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிடுவோம். ஆறுமாத காலம் உண்மையிலேயே நீ சிவனை
மனமுருகிப் பிரார்த்தனை செய்து ஆண் தன்மை பெற்றுவிட்டால் பின்
எந்தச் சிக்கலும் இராது!’’ என்றான்.

உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்? சிகண்டி குளியலறையில்
நீராடியபோது, கணவனின் முழுமையான அழகை ரசிக்க நினைத்த புது மனைவி சாளரத்தின் வழியே
எட்டிப் பார்த்தாள்.
அதுவரை மறைக்கப்பட்டிருந்த ரகசியத் தை அறிந்துவிட்டாள். தந்தையிடம் ஓடோடிச்
சென்று தாங் கள் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கூறி ஓவென்று ஓலமிட்டு அழுதாள்.
இரண்யவர்மன் கடும் சீற்றமடைந்தான். வழக்கம் போல் ஆணுடை தரித்து வெளியே வந்த
சிகண்டி, தன்னைப் பற்றிய ரகசியம் வெளிப்பட்ட விவரமறிந்து திகைப்படைந்
தாள். ஆனால் சாமர்த்தியமாக ஒரு நாடகமாட முடிவு செய் தாள். மன்னன்
இரண்யவர்மன் முன் வந்த சிகண்டி, உரத்த குரலெடுத்து கர்ஜித்தாள்:


இப்படிச் சொல்லிவிட்டு, கம் பீரமாகத் தன் தேரிலேறிய சிகண்டி, குதிரைகளின் கடி வாளத்தைப் பிடித்துச்
சொடு க்கினா ள். குதிரைகள் அவள் தேசத்தை நோக்கிக் காற்றாய்ப் பறந்தன.
சிகண்டி அப்போ தைக்கு அந்தச் சிக்கலிலிருந்து தப்பித் து விட்டாள். ஆனால், தன் மகள் கூற்றையே
பெரிதும் நம் பிய இரண்யவர்மன், இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந் தான்.
வஞ்சினத்தோ டு, அவனுடைய படைகள் துருபதன் நாட்டை நோக்கிப் பாய்
ந்து வந்துகொண்டிருக்கும் விவரத்
தைச் சிகண்டி அப்போது அறியவி ல்லை. தன் நாடு சென்ற சிகண்டி நேரே அரண்
மனைக்குச் செல்லா மல் கானகம் சென்றாள். இனி இந்த அவ மானத்தோடு
உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை.

பிராயோபவேசம் என்னும் முறை யில் உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டுவிட
வேண்டியதுதா ன். உரிய
நேரத்தில் கிட்டாத சிவனருளால் இனியென்ன பயன்? கானகத்தில் ஒரு குகையின் முன்னே இருந்த பெரிய ஆல
மரத்தின் அடி யில் இரவு பகலாக ஒரே நிலையில் அமர்ந்து உண்ணா
நோன்பிருக்கலா னாள் சிகண்டி. அந்தக் கு
கையில் குபேரனுக்கு வே ண்டியவ னான ஸ்தூணா கர்ணன் என்ற யட்சன் வா ழ்ந்துவந்தான்.
கருணை யுள்ளம் கொண்ட அவன் சிகண்டியிடம் வந்து பரி வோடு
விசாரித்தான். சிக ண்டி அவன் அன் புக்கு மரியாதை கொடுத்து, தன் வரலாறு முழுவதையும்
சொன்னாள். ‘‘இவ்வளவுதானே?’’ என்று ஆறுதலாகக் கேட்டான் அவன். ‘‘சிகண்டி, வருந்தாதே!


யட்சன் அவள் தலையில் கைவைத்து மந்திரஜபம் செய்தா ன். சில கணங்களில், என்ன ஆச்சரியம்! சிகண்டி ஆணானா
ள். அவன் பெண்ணானான். இப்போது சிகண்டி அவளல்ல. அவன்! சிகண்டி ஓடோடித்
தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். நாட்டைப் படைகள் சூழ்ந்திருப்பதையும் தன்
மாமனார் கடும் சீற்றத்தோடிருப்பதையும் அறிந்தான். தன் பெற்றோர் முன்னி
லையிலும் தன் நாட்டு மக்கள் முன்னிலையி லும் தன் மாமனாரான இரண்யவர் மனை அறைகூவி
அழைத்தான்: ‘‘ இரண் யவர்மரே! மாமனார் என்றால் தந் தை ஸ்தானம் அல்லவா? அப்படி யிருக்க உங்கள்
மாப்பிள்ளை மேல் இப்படி அபாண்டப் பழி சுமத் தலாமா? என்தேச மக்கள் என்னை ப்
பற்றி என்ன நினைப்பார்கள்?
உங்கள் பெண்ணிடம்தான் ஏதோ மனக்கோளாறு இருக்கிற தே தவி ர என்னிடம் எந்த
உடல் கோளா றும்
இல்லை. அவச ரப்பட்டுப் படையெடுத்து வந்திருக்கிறீ ர் களே? ஏன் என்னை நீங்கள் மருத்துவக்குழுவை
வைத்துப் பரிசோதிக்கக்கூடாது? எங்கள் நாட்டு மருத்துவர்கள் தேவை
யில்லை. உங்கள் நாட் டிலிருந்தே மருத்துவர்கள் சில ரை அழைத்து வாருங்கள். நான்
சோதனைக்கு உட்படத் தயார்!” சிகண்டியின் கம்பீர மான அறைகூவல் இரண்யவர்மனைத்
திகைக்க வைத்தது. அவன் உடனடி யாகத் தன் தேச
மருத் துவர்கள் சிலரை வர வழைத்தான். அவர்கள் அந்தரங்கமாக சிகண்டி யைப்
பரி சோதித்தார்கள். பின்னர் இரண் யவர்மனிடம் பொதுமக்கள் முன்னி லையில்
அந்த மருத்துவர்க ள் ஏகோ பித்த அபிப்ராயத்தைத் தெரிவித்தா ர்கள்:
‘‘மன்னா! ஆணழகரான சிகண்டியிட ம்
எந்த உடல் கோளாறும் இல்லை. அவர் முழுமையான ஆண்மகன்தா ன். எங்க
ளுக்கொரு சந்தேகம். நம் நாட்டு ராஜகுமாரியை நல்ல மன நல மருத்துவரிடம் காண்
பிப்பது நல்லது!’’இந்த விளக்கத் தைக் கேட்டு இரண்ய வர்மன் அவமானம்
அடைந்தான். தன் மாப்பிள்ளையிடமும் அவனது பெற்றோரிடமும் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டான். தன் மகளை அழைத்துவந்து சபை முன் அவளைத் தாறு
மாறாக ஏசலானான்.

அப்போது குறுக்கிட்டான் சிகண்டி. ‘‘இரண்யவர்மரே! நட ந்தது
நடந்துவிட்டது. இனிப் பழையவற்றைப் பேசுவதால் லாபமென்ன? உங்கள் மகளை என்
முன்னிலையில் நீங்கள் ஏசக் கூடாது. ஏனென்றால் இப்போது அவள் உங்கள் மகள் மாத்திரமல்ல என் மனைவியும் கூட. என்
அன்பான மனை வி மீது யார் கடும்சொல் கூறினாலும் அதை என்னால் அனு மதிக்க
இயலாது!’’
த
ன் மனைவியை இழுத்து அணை
த்துக் கொண்டான் சிகண் டி! அவ ள் அவன் மார்பில் தலைவைத்து விம்மினாள்.
இரண் யவர்மன் தன் மகளை சரியான இடத்தில்தான் ஒப்படைத்தி ருக்கிறோம்
என்ற நிம்மதியோடு விடைபெற்றான். ஆனால், சிகண்டியின் மனை விக்குத்தான் தன் கண்
தன்னை எப்படி ஏமாற்றியது என்று கடைசிவரை தெரியவில்லை! குளியல றைச்
சாளரம் பொய் சொன்னதோ! ஓராண்டு என்பது, முந் நூற்று அறுபத்தைந்தே
நாட்களில் உருண்டு ஓடியே போய் விட்டது. சிவனை வணங்கிய சிகண்டி, யாருமறியாமல் கா
னகம்சென்றான். தனக்கு ஆண் மையை வழங்கிய
ஸ்தூணா கர்ணன் என்ற அந்த யட்சனை மறுபடி சந்தித்தான். தன் ஆண்
மையை ஏற்று மீண்டும் தனக் குப் பெண்மையை வழங்குமா று நன்றியுடன் வேண்டினான்.


ஆனால், ஸ்தூணாகர்ணனோ கலகலவென்று சிரித்தான். பின் சொல்லலானான்: ‘‘அன்பனே சிகண்டி! என் இரக்கத் தின்
காரணமாகத்தான் நான் உனக்கு என் ஆண் தன்மையை வழங்கினேன். நான் பெண்ணானேன். நீ
விடைபெற்றுச் சென்ற சில நாட்களில் என் தலைவன் குபேரன் இங்கே வந்
திருந்தார். என் நிலைகண்டு சீற்றமடை
ந்தார். இரக்கப்படுவதற்கு ஓர் அளவில் லையா, இனி நீ பெண்ணாகவே தான் இருப்பாய்
என்று சபித்துவிட்டார். நல்ல நோக்கத்தோடு செய்த செயலுக்கு இப்ப டியொரு
சாபமா என்று கதறினேன். அவ ர் மனமிரங்கினார். நீ யாருக்கு ஆண் தன்மையை வழ
ங்கினாயோ அவர் காலமானபின் நீ மீண்டும் ஆணாவாய் என்று சாப விமோசனம்
அருளினார்.

நீ நெடுநாள்
வாழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஏனென்றால் நான் பெண்ணானதில் எனக்கு இப்போது வருத்
தமெதுவும் இல்லை. ஒருபெ ண் அடையக் கூடிய சுகதுக்க ங் களை அனுபவபூர்வமாக அறிய
இது ஒரு வாய்ப்பு என் றே என் மனம் நினைக்கிறது. வாழ்க்கைச் சம்பவங்கள் வி
சித்திரமானவை. நீயும் நானு ம் ஆணாகவும் பெண்ணாக
வும் இருந்து இருவேறு நிலை
மைகள் குறித்தும் அறிந்து கொண்டோம். இது கடவுள் தந்த பேறு!’’ யட்சனின் அன் பான
பேச்சைக் கேட்ட சிகண் டியின் கண்கள் கலங்கின. யட்சனை வணங்கி ஆசிபெற்ற
சிகண்டி தன் அரண்மனைக்குத் திரும் பினான். தன் தாய், தந் தையரிடம் நடந்த
சம்பவங்கள் அனை த்தையும் விளக்கி னான்.

துருபதனும் அவன் மனைவியும் சிவபெருமான் அல்லவோ யட்சனின்
மனத்திற்குள் புகுந்து இத்தகைய திருவிளையாட
லை நிகழ்த்தியிருக்கிறார்
என்று வியந் தார்கள். அவர்கள் சிகண்டியோடு பூஜை யறைக்குச் சென்று தரையில்
விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த க்காட்சியைப்பார்த்த
சிகண்டியின் ம னைவி, ஏன் இவர்கள் திடீரென்று பூஜை யறைக்குச் சென்று சிவனை
வணங்குகி றார்கள் என்றறியாமல் திகைத்தாள். ஆண்மை நிறைந்த தன் கணவனின் சிவ
பக்தியை நினைத்து அவள் உள்ளம் மகி ழ்ந்தது. (மகாபாரத இதிகாசத்தில் அம்
போபாக்கியானம் என்ற பகுதியில் வரும் இந்தக் கிளைக் கதை, வாக்குத் தவறாமையின்
மகத்துவத் தையும் இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதை
யும் விவரிக்கிறது.)

No comments:
Post a Comment