ஒரே ஆண்டில் இருமுறை வருகிறது வைகுண்ட ஏகாதசி,மீலாடி நபி பண்டிகை
விழாக்கால நல்வாழ்த்துக்கள் என் உறவுகளே!
கடவுள்களுக்குள் இருக்கும் ஒற்றுமை கூட
மனிதர்களுக்குள் பார்க்க முடிவதில்லை ஒரு சில சுயநலவாதிகளால்
ஒரேயாண்டில் இந்து மற்றும் இஸ்லாமிய முக்கிய தினங்கள் இரு முறை வருவது 2015ம் ஆண்டின் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.
இந்த ஆண்டில் அரிய நிகழ்வுகள்: வைகுண்ட ஏகாதசி, மீலாடி ஆருத்திரா தரிசனம் 2 முறை வருகிறது
இரு வைகுண்ட ஏகாதசி மற்றும் மீலாடி நபி விழாக்கள் வரும் சிறப்பு ஆண்டாக 2015 அமைய உள்ளது.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் சொக்கவாசல் திறப்பு நடை பெறும். மாதந்தோறும் வரும் சாதாரண ஏகாதசியை விட வைகுண்ட ஏகாதசிக்கு தனி சிறப்பு உண்டு. அன்றிரவு முழுவதும் விழித்திருந்தால் பெருமாள் திருவடியை அடையலாம் என்பது ஐதீகம். திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
வரும் 2015ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி வருகிறது. இதே ஆண்டில் மற்றொரு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 21ம் தேதி வருகிறது. இதேபோல் சிவனுக்கு உகந்த ஆருத்திரா தரிசனமும் 2015ல் ஜனவரி 5, டிசம்பர் 26ம் தேதி வருகி றது. திருவாதிரை திருநாள் எனப்படும் இந்த நாளில் சிவபெருமானுடன், மாணிக் கவாசகருக்கும் திருவிழா கொண்டாடப்படும். ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி, ஆருத்திரா தரிசனம் வருவது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இதேபோல இஸ்லாமியர்களின் முக்கிய தினங்களுள் ஒன்றான மிலாடி நபியும் ஜனவரி 4, டிசம்பர் 24 என இரு முறை வருகிறது. இந்த நாளில் இறைவனை பிரார்த்தனை செய்து நபிகள் நாயகத்தின் சொற்பொழிவுகளை கூறி தான தர்மங்களை இஸ்லாமியர்கள் செய்வதை வழக்கமான கடமையாக கொண்டுள்ளனர்.
— with சுபா ஆனந்தி, Chitra Subburaj and Subha Ganesh.விழாக்கால நல்வாழ்த்துக்கள் என் உறவுகளே!

No comments:
Post a Comment